இளவரசி உதித்தாள்
முப்பத்துமூன்று வருடங்களுக்கு முன்பு.......
ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி.. இசபெல் மருத்துவமனையில்... நிறைமாதமாக இருந்த அந்த தேவதை... லட்சணமான தோற்றத்தோடும்.. சிவந்த முகம், பிள்ளையை பெற்றெடுக்கவேண்டிய வலியில்.... முகத்தில் பயமும், குழையை பார்க்கத்துடிக்கும் பதட்டமும், அந்த தனி அறையில்... மறுபிறப்பெடுக்க காத்திருந்தாள்... தேதி குறித்ததோ ஆகஸ்ட் ஐந்தாம் தேதி... ஆனால் எந்த வலியும் இல்லை... அறிகுறியும் இல்லை...
நாட்கள் கடந்தன... மனதில் பயமும்... கவலையும்... குழந்தையை பெற்றெடுக்கும் அழுத்தத்துடன்.. துடித்த தாயின் அந்த தருணங்கள்...
அழைக்காத தெய்வம் இல்லை...நாட்கள் கடக்க கடக்க...குழந்தையும் கருவறையை விட்டு வெளியே வர விரும்பவில்லை போல... ஆகஸ்ட் 14 ஆம் தேடி ஆகிவிட்டது... மதியம் 3 மணி.. இன்னும் குழந்தை வெளிவரும் நேரமும் தெரியவில்லை... கம்மாபுரத்து வேதம்மாள் சென்னைக்கு வந்து.. திருவேற்காடு சென்று... மாரியம்மன் கோவில் விபூதியோடு வந்து அவளை பார்க்க.. சற்றுநேரத்தில்... வலி தொடங்க ஆரமித்தது.. 3.15 க்கு ஆரமித்த வலி.. நள்ளிரவு.. 2.15 க்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி.. அந்த பிரசவ அறையில் பிறந்த அத்தனை சிசுக்களும் ஆண் குழந்தைகள்.. இவள் மட்டுமே.. சுகப்பிரசவத்தில் அழகான ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.. பெற்றெடுத்த அந்த தேவதை... என் அம்மா சாருமதி.. அவள் பெற்ற மகள் நான்...
-
பயணம் தொடரும்....